நீலகிரி : குன்னூரில் உள்ள காட்டேரி பூங்காவில் முதல் சீசனுக்காக ஒன்றரை லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மலை மாவட்டம் என்பதால் சுற்றுலா தளங்கள் அதிகளவு உள்ளன. இதன் காரணமாக, உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வருகை தருகின்றனர். குன்னூரை பொறுத்தவரையில், சுற்றுலா தளங்களாக சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, இயற்கைக் காட்சி முனைகளான லேம்ஸ், டால்பி நோஸ் போன்றவை உள்ளன.
குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் குன்னூரில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் காட்டேரி பூங்கா உள்ளது. இயற்கை காட்சிகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த பூங்காவில், ஆண்டுதோறும் முதல் மற்றும் இரண்டாம் சீசனுக்கு புதிய மலர் நாற்றுகள் நடவு செய்யப்படுகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் முதல் சீசனுக்கு 1.5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் டேலியா, சால்வியா, பெட்டோனியா, பிளாக்ஸ் போன்ற 17 வகையான மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளன. மேற்கண்ட மலர் நாற்றுகளுக்கான விதைகள் பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற வெளிநாடுகளிருந்தும், உள்நாட்டிலிருந்தும் வரவழைக்கப்பட்டு விதைக்கப்பட்டுள்ளன. இவை நாற்றுகளாக வளர்ந்தபின், நடவு செய்யும் பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.