கோவையில் விவசாயியின் உடல் தானத்தால் மறுவாழ்வு பெற்ற 6 பேர்

கோவை : சாலை விபத்தில் மூளைச் சாவடைந்த விவசாயியின் உடல் தானம் செய்யப்பட்டதால், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் மறுவாழ்வு பெற்றனர்.

கோவை : சாலை விபத்தில் மூளைச் சாவடைந்த விவசாயியின் உடல் தானம் செய்யப்பட்டதால், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் மறுவாழ்வு பெற்றனர். 

ஈரோடு மாவட்டம் ஊசிபாளையத்தில் கே.சண்முகம் (55) என்பவர் மனைவி பார்வதி மற்றும் மகன் லோகேஷுடன் வசித்து வந்தார். இவர் கடந்த 18-ம் தேதி இரவு 10.45 மணியளவில் மிதிவண்டியில் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, அரச்சலூர் அருகில் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கிக் கொண்டார். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த அவர், உடனடியாக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை, அவிநாசி ரோடு கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. 

இந்த நிலையில், இன்று அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது மனைவி பார்வதி, மகன் லோகேஷ் மற்றும் அவரது உறவினர்கள் சண்முகத்தின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அவரது கல்லீரல், சிறுநீரகம் கண்கள், தோல் மற்றும் எலும்பு ஆகியவை தானமாகப் பெறப்பட்டது. கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், கண்கள், தோல் மற்றும் எலும்பு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது. 

 

இது குறித்து கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி கூறுகையில், "மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால். அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். உடல் உறுப்பு தானம் வழங்கிய கே. சண்முகம் குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று கூறினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...