நீலகிரி : கோத்தகிரி பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு நிலைய கழிவு நீர் கால்வாயில் விழுந்து சுமார் 9 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டெருமை உயிரிழந்தது.

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து வனவிலங்குகள் நகர்ப்புறங்களிலுள்ள குடியிருப்பிற்குள் உலா வருவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில், பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு நிலையம் அருகே தினமும் உலா வரும் ஒற்றை காட்டெருமை, அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது. இது குறித்து அங்கு பணியாற்றி வரும் ஊழியர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள், காட்டெருமை உயிரிழந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.