கோவை : சூடான் அதிபர் ஒமர் அல் பஷீரை கண்டித்து கோவையில் பயிலும் சூடான் நாட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் உள்நாட்டுப் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டு, அந்நாட்டு மக்கள் பெருமளவில் அவதிப்பட்டு வருகின்றனர். சூடான் அதிபர் ஒமர் அல் பஷீர் உரிமைகளுக்காகப் போராடும் மக்கள் மீது தாக்குதல் நடத்தி அராஜக போக்குடன் செயல்பட்டு வருவதாக சூடான் நாட்டு மாணவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், சூடான் அதிபர் ஒமர் அல் பஷீர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ராணுவ உதவியுடன் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும், போர்க்குற்றம், இனப் படுகொலை ஆகிய குற்றங்களில் தற்போதைய அதிபர் தலைமையிலான அரசு ஈடுபட்டு வருவதாகக் கூறி கோவையில் பயிலும் சூடான் நாட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சூடான் நாட்டின் நலன் கருதி அதிபர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது தாய் மொழியில் கண்டன முழக்கங்களை எழுப்பினர். தங்களது மொழியில் ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்களை, கடந்து சென்ற பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
கோவையில் சூடான் நாட்டை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு கல்லூரிகளில் பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.