நீலகிரி : மசினகுடி வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனக்காப்பாளர் அண்ணாதுரை என்பவரை கரடி தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.

முதுலை புலிகள் காப்பக பகுதிக்கு உட்பட்ட மசினகுடி வனப்பகுதியில் வனக்காப்பாளர் அண்ணாதுரை என்பவர் ரோந்து பணியி்ல் ஈடுபட்டிருந்தார். அப்போது, புதர் மறைவிலிருந்த கரடி வனக்காப்பாளரை பலமாகத் தாக்கியது. இதில், அவருக்கு கை, கால் மற்றும் தலை பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, மசினகுடி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அழைத்து வர வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.