பிச்சைக்காரர்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க வலியுறுத்தி நடைபயணம் மேற்கொள்ளும் டெல்லி இளைஞர் கோவை வருகை

கோவை : பிச்சைக்காரர்கள் இல்லாத நாடாக, இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொள்ளும் டெல்லி இளைஞர் இன்று கோவை வருகை புரிந்துள்ளார்.

கோவை : பிச்சைக்காரர்கள் இல்லாத நாடாக, இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொள்ளும் டெல்லி இளைஞர் இன்று கோவை வருகை புரிந்துள்ளார். 

டெல்லியை சேர்ந்த இளைஞர் ஆசிஷ் சர்மா (29). இவர் பிச்சைக்காரர்கள் இல்லாத நாடாக இந்தியா மாற வேண்டும் என வலியுறுத்தி ஜம்மு உன்முத் பகுதியிலிருந்து 17,000 கி.மீ நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், ராமேஸ்வரம், மதுரை, திண்டுக்கல் வழியாக பிரச்சாரம் மேற்கொண்டவர் இன்று கோவை வந்துள்ளார். 



மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்த ஆசிஷ் சர்மா கூறுகையில், "நான் ஒரு தொழில்நுட்ப பட்டதாரி. முன்னதாக, வெளிநாட்டு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். தற்போது, நான் மேற்கொள்ளும் இந்த நடைபயணத்திற்காக, எனது வேலையை ராஜினாமா செய்துவிட்டேன். தொடர்ந்து, 17 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணிக்க உள்ளேன். தற்போது, 15,903 கி.மீ தூரம் வரை பயணத்தைத் தொடர்ந்துள்ளேன், என்றார். 

இந்த பயணத்தை நோக்கி அவரின் எண்ணங்கள் வர என்ன காரணம் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "ஒரு நாள் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, கையில் ரத்தம் சொட்ட சிறுவன் ஒருவன் பிச்சை எடுப்பதைக் கண்டேன். உண்மையில், மிகவும் மனம் வருத்தமாக இருந்தது. ஆகவே, அந்த சிறுவனை அழைத்துச் சென்று முதலுதவிகள் கொடுத்து, அதன் பின்னர் பள்ளியில் சேர்த்தேன். 

இந்த சம்பவம் என் மனதை மிகவும் பாதித்தது. அதனைத் தொடர்ந்து, பணியினை ராஜினாமா செய்துவிட்டு, பிச்சைக்காரர்கள் இல்லாத நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரச்சாரம் செய்யத் தொடங்கினேன். கடந்த 2015ம் ஆண்டு முதல் இதனைச் செய்து வருகிறேன். அரசும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தது. இருப்பினும், இதனை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியவில்லை. 

இதையடுத்து, பொதுமக்களிடம் இதனைக் கொண்டு செல்ல கடந்த 2017ம் ஆண்டு முடிவெடுத்து, ஆகஸ்ட் 22ம் தேதி ஜம்முவில் தொடங்கினேன். ஹிமாச்சலப் பிரதேசம், பஞ்சாப்,சண்டிகர், ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா, கோவா, ம.பி, உ.பி, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைக் கடந்து வந்திருக்கிறேன். தற்போது, தமிழகம் வந்தடைந்துள்ளேன். தினமும் 30 முதல் 40 கி.மீ வரை நடந்து கொண்டிருக்கிறேன். பயணத்தின் இறுதியில் டெல்லியில் மிக பெரிய பேரணியை நடத்த உள்ளேன், என்றார். 

அடுத்ததாக, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரத்தை அடுத்து புதுச்சேரி செல்லவிருக்கிறார் ஆசிஷ். அதனைத் தொடர்ந்து, சென்னை சென்று அங்கிருந்து அந்தமான் நிக்கோபார் செல்லவுள்ளார். மேலும், வரும் மார்ச் 9ம் தேதி தனது பயணத்தை நிறைவு செய்ய உள்ளதாக அவர் தெரிவித்தார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...