கோவை : கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் ஸ்மார்ட் கார்டு வடிவில் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்று ஆகியவை இன்று வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வழங்கப்பட்டன.
கோவை : கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் ஸ்மார்ட் கார்டு வடிவில் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்று ஆகியவை இன்று வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வழங்கப்பட்டன.
இது குறித்து கோவை மண்டல போக்குவரத்து இணை ஆணையர் கே.ஆர். கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது ;- கோவை மண்டலத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் மாதம் சுமார் 11 ஆயிரம் ஒட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 20 ஆயிரம் வாகனங்களின் பதிவு சான்றுகள் பதிவு செய்யப்படுகின்றன.
கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், தாராபுரம், உள்ளிட்ட 16 போக்குவரத்து கழகங்களில் இன்று காலை முதல் ஒட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்றுகள் ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்கப்பட்டன.
இந்த ஸ்மார்ட் கார்டு மிகவும் பாதுகாப்பானது. மைக்ரோ சிப், கியூ ஆர் கோட் போன்ற வசதிகள் உள்ளன. அதே போல், ஹாலோகிரம் வசதியுடன் ஸ்மார்ட் கார்டுகள் வருகின்றன. இந்த ஸ்மார்ட் கார்டு மூலம் விதி மீறல்களில் ஈடுபடுவோர்களை ஏடி.எம்.கார்டு போல் 'ஸ்வைப்' செய்து கண்டுபிடித்துவிடலாம்," இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், கடந்த மாதமே இந்த திட்டம் சென்னையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அமலுக்கு வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.