திருப்பூர் : நேற்றிரவு திருநங்கைகளை போலீசார் தாக்கியதைக் கண்டித்து, திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு திருநங்கைகள் மனு அளித்தனர். அதனை போலீசார் ஏற்காததால் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகர பகுதியில் 114 திருநங்கைகள் உள்ளனர். இவர்களுக்கு நெரப்பரிச்சல் பகுதியில் அரசின் சார்பில் குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு தொழில் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசு தொழிற்பயிற்சி பெற்று, தனியார் பின்னலாடை நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வரும் திருநங்கை நாகலட்சுமி(21), மற்றும் அவருடன் சிவகாமி (27), என்ற மற்றொரு திருநங்கை என இருவரும் பணி முடிந்து நேற்றிரவு ப்ரிட்ஜ்வே காலனி பகுதி வழியாக நடந்து வந்துள்ளனர்.

அப்போது, அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் இரு திருநங்கைகளையும் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, புகார் மனு அளித்தனர்.

ஆனால், போலீசார் திருநங்கைகளின் புகார் மனுவை ஏற்க மறுத்ததையடுத்து, ஆத்திரமடைந்த திருநங்கைகள் காவல் நிலையம் முன்பாக குமரன் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, திருநங்கைகளை சமாதானப்படுத்தி போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.