நீலகிரி : காஷ்மீர் மாநிலத்தில் வெடிகுண்டு தாக்குதலுக்கு பலியான ராணுவ வீரர்களுக்கு உதகை சர்வ சமய ஒருங்கிணைப்பு குழு சார்பில் மலர்த்தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா பகுதியில், ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாத அமைப்பு நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட இந்திய இராணுவ வீரர்கள் பலியாகினர்.

இதையடுத்து, அந்த சம்பவத்திற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததோடு, அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, உதகை சர்வ சமய ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

உதகை ஏடிசி திடல் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நீலகிரி மறைமாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமை ஏற்றார்.

மேலும், நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு இறந்த ராணுவ வீரர்களுக்கு மலர்த்தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.