கால்நடை பராமரிப்பு உதவியாளர்களுக்கான நேர்முகத்தேர்வு ரத்து : முறையான அறிவிப்பு வழங்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

திருப்பூர் : கால்நடை பராமரிப்பு உதவியாளர்களுக்கான நேர்முகத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், அழைப்பாணை பெற்றவர்களுக்கு முறையான அறிவிப்பு தராமல் அலைக்கழிப்பதாகக் குற்றம்சாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

திருப்பூர் : கால்நடை பராமரிப்பு உதவியாளர்களுக்கான நேர்முகத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், அழைப்பாணை பெற்றவர்களுக்கு முறையான அறிவிப்பு தராமல் அலைக்கழிப்பதாகக் குற்றம்சாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 



திருப்பூர் காமராஜர் சாலையில் அமைந்துள்ள கால்நடை மருத்துவ மனையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தவர்களுக்கு அழைப்பாணையும் அனுப்பப்பட்டது. 

இதையடுத்து, நேர்முகத் தேர்வில் பங்கேற்க திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர். 



இதற்கிடையில், நிர்வாக காரணங்களால் நேர்காணல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த அழைப்பாணை பெற்றவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...