நண்பரை கொலை செய்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை : திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு அதிரடி தீர்ப்பு!

திருப்பூர் : திருப்பூரில் நண்பரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருப்பூர் : திருப்பூரில் நண்பரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 



கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி அன்று இரவு சுமார் 11 மணி அளவில் காந்திநகர் செட்டியார் திருமண மண்டபத்திற்கு எதிரில் நண்பர்கள் இருவருக்கிடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், அதிசூரன் என்பவரை, திருப்பதி என்பவர் இரும்பு கட்டையால் தாக்கியுள்ளார். அதில், அதிசூரன் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். 



இது குறித்து வழக்குப்பதிவு செய்த திருப்பூர் அனுப்பர்பாளையம் காவல்துறை திருப்பதியைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, திருப்பதி சிறையில் அடைக்கப்பட்டார். இது குறித்த வழக்கு விசாரணை திருப்பூர் இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு மற்றும் நீதிபதி முகமதுவின் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற இறுதி விசாரணையில், குற்றம் நிரூபிக்கப்பட்ட காரணத்தால் குற்றவாளி திருப்பதிக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும். ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதனையடுத்து, குற்றவாளி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...