கோவையில் யானைகளின் வழித்தடத்தை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

கோவை : யானைகளின் வழித்தடத்தைக் கண்காணிப்பதன் அவசியம் மற்றும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தேசிய அளவிலான கஜ யாத்திரை இன்று கோவையில் தொடங்கியது.

கோவை : யானைகளின் வழித்தடத்தைக் கண்காணிப்பதன் அவசியம் மற்றும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தேசிய அளவிலான கஜ யாத்திரை இன்று கோவையில் தொடங்கியது. 

யானை வழித்தடங்கள் அமைந்திருக்கும் அனைத்து மாநிலங்களிலும் வன உயிரின அறக்கட்டளை சார்பில் கஜ யாத்திரை நடத்தப்படுகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில், வன உயிரின அறக்கட்டளையுடன் டாட்டா கெமிக்கல்ஸ் லிமிடெட் (TCL), சர்வதேச வன உயிரி நிதியம் (IFAW), ஓசை சுற்றுச்சூழல் அமைப்பு ஆகிய அமைப்புகள் இணைந்து, இந்த யாத்திரையை நடத்துகின்றன. மேலும், இந்த திட்டத்தை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாட்டு அமைச்சகம், யானைகளுக்கான திட்டம், தமிழ்நாடு வனத்துறையினர் ஆதரிக்கின்றனர். 



இந்த பேரணியானது, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கி, ஆனைக்கட்டி பழங்குடியின நலப் பள்ளியில் நிறைவடைந்தது. அங்கு, பள்ளிக்குழந்தைகளால் விழிப்புணர்வு வீதி நாடகங்கள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகக் கூட்டம் நடைபெற்றது. மேலும், இந்த கஜ யாத்திரை, விழிப்புணர்வு பயணத்தில் 3 செயற்கையாக சோடிக்கப்பட்ட யானை உருவகங்களை உடன் கொண்டு செல்கின்றனர். 

குறிப்பாக, இந்த விழிப்புணர்வு யாத்திரையில் ஆனைக்கட்டியைத் தேர்வு செய்ய முக்கிய காரணம் ஒன்றுண்டு. ஏனென்றால், யானை வலசைப் பாதையில் ஒன்றான பொலுவாம்பட்டி - அட்டபடியின் நெருக்கமான பகுதி ஆனைக்கட்டியாகும். மேலும், இது கேரள மற்றும் தமிழகத்தின் இடையே உள்ள மிக முக்கிய யானை வழித்தடம் ஆகும். 



இதுகுறித்து இந்த தென்னிந்திய யானைகள் வழித்தட பாதுகாப்பு திட்ட மேலாளர் கே. ராம்குமார் கூறுகையில், "தென்னிந்தியாவில், கோவை மாவட்டத்தில் 7 யானை வழித்தடங்கள் அமைந்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 16 வழித்தடங்கள் உள்ளன. இதில், நீலகிரி மாவட்டம், 5 வழித்தடங்களும், ஶ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் ஒவ்வொரு வழித்தடங்களையும் கொண்டுள்ளன. 

இந்த வழித்தடங்களைக் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளும் எங்கள் பேரணியானது, தமிழகத்தில் கோவை, நீலகிரி, வால்பாறை, சத்தியமங்கலம், ஶ்ரீவில்லிபுத்தூர், ஓசூர் ஆகிய பகுதி வழியாகச் சென்று, வரும் மார்ச் மாதம் 8ம் தேதி சென்னையில் நிறைவடையும். மேலும், இது வெறுமனே, அதன் வழித்தடங்கள் பற்றிய பிரச்சாரமாக இல்லாமல், வழித்தடங்களின் ஆக்கிரமிப்புகள், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்த பகிர்வு பயணமாகவும் இருக்கும்", என்றார். 



மேலும், வன உயிரின அறக்கட்டளை சார்பில், தொடர்ச்சியான நில ஆக்கிரமிப்புகள் மூலம் மாறும் யானை வழித்தடங்களை மீட்க 'பசுமை வழித்தட சாம்பியன்ஸ்' குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு முயற்சியில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கும், உள்ளூர் என்.ஜி.ஓ,க்களுக்கும் அழைப்பு விடுத்துவருகிறது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...