கோவையில் ராணுவ வீரர்களுக்காக ஒட்டப்பட்ட போஸ்டர்களை கிழித்த போலீசார் : முஸ்லீம் கட்சியினர் கண்டனம்

கோவை : தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ராணுவ வீரர்களுக்காக ஒட்டப்பட்ட போஸ்டர்களை காவல்துறையினர் கிழித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியினர் நள்ளிரவில் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை : தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ராணுவ வீரர்களுக்காக ஒட்டப்பட்ட போஸ்டர்களை காவல்துறையினர் கிழித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியினர் நள்ளிரவில் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. 



கோவையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாத தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், தீவிரவாதத்திற்கு எதிராகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. மேலும், மார்ச்,1, 2, 3 ஆகிய தேதிகளில் ஆத்துப்பாலத்தில் 'அமைதியை நோக்கி' என்ற பொதுக்கூட்டத்தின் பேனர்களும் காவல்துறையின் அனுமதியோடு வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. 



இந்நிலையில், நேற்று காவல்துறையினர் பேனர்களையும், போஸ்டர்களையும் கிழித்ததாக மனிதநேய மக்கள் கட்சியினர் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், ராணுவ வீரர்களுக்காக ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களை போலீசார் கிழித்தது வேதனைக்குரிய செயலாகும் எனவும் தெரிவித்துள்ளனர். 



இதற்கிடையில், நேற்றிரவு ஆத்துப்பாலம் அருகே போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியினை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டனர். இதையடுத்து, அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க காவல்துறையினர் அந்த பகுதியில் குவிந்தனர். இந்நிலையில், நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்பு அனைவரும் கலைந்து சென்றனர். 

திடீரென ஆத்துப்பாலம் பகுதியில் காவல்துறையைக் கண்டித்து, மனிதநேய மக்கள் கட்சியினர் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் நள்ளிரவில் ஒன்று திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...