அதிமுகவினருக்கு மட்டுமே உதவித்தொகையா? : திருப்பூரில் எதிர்கட்சியினர் போராட்டம்

திருப்பூர் : அமைப்புச்சார தொழிலாளர்களுக்கான உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பத்தினை அதிமுகவினர் பெற்றுக்கொண்டு, அதிமுகவினருக்கு மட்டுமே வழங்கி வருவதாகத் திருப்பூரில் எதிர்கட்சியினர் மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : அமைப்புச்சார தொழிலாளர்களுக்கான உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பத்தினை அதிமுகவினர் பெற்றுக்கொண்டு, அதிமுகவினருக்கு மட்டுமே வழங்கி வருவதாகத் திருப்பூரில் எதிர்கட்சியினர் மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



தமிழகம் முழுவதும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்குத் தமிழக அரசு ரூ.2000 வழங்குவதாக அறிவித்தது. இத்தொகை வரும் 24ம் தேதி முதல் வழங்கப்படவுள்ள நிலையில், அந்தந்த மாநகராட்சி மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்களில் அதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 



இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சியில் அதற்கான விண்ணப்பங்களை ஒட்டு மொத்தமாகப் பெற்றுக்கொண்ட அதிமுகவினர், அதிமுகவை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கி வருவதாகத் தெரிகிறது. ஆகையால், இதனைப் பாகுபாடின்றி அனைவருக்கும் வழங்கவேண்டும் எனக் கோரி திமுக, கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாநகராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதன் பின்னர், அனைத்து கட்சியினரும் கலைந்து சென்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...