5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த அரசு எந்த ஆணையும் பிறப்பிக்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த அரசு எந்த ஆணையும் பிறப்பிக்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது ;- தமிழகத்தில், முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. மின்துறை அமைச்சர் தங்கமணியின் சிறப்பான செயல்பாட்டால், மின்மிகை மாநிலமாகத் தமிழகம் உருவாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து துறை ரீதியாகத் தயார் ஆகிவருகின்றனர். ஆனால், அரசாணை பிறப்பிப்பது பற்றி அரசு தான் முடிவெடுக்க வேண்டும். அது குறித்து அரசு எந்த ஆணையும் பிறப்பிக்கவில்லை. ஆணை பிறப்பித்தால் மட்டுமே இது நடைமுறைக்கு வரும். அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது குறித்து முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும், இவ்வாறு அவர் பேசினார்.

ஏற்கனவே, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் நிலையில், 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தினால், அவர்களை உளவியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்படுவார்கள். என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பரவும் அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி அளிக்கும் வகையில், அமைச்சா் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.