நீலகிரி : முதுமலை அருகே வனத்துறை காப்பாளரை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தவருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நீலகிரி : முதுமலை அருகே வனத்துறை காப்பாளரை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தவருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
முதுமலை அருகே உள்ள மாவனல்லாவைச் சேர்ந்தவர் கண்ணன். இவர், வனத்துறை காப்பாளராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி மாவனல்லா அருகே கிருஷ்ணன் என்பவர் காட்டு யானையை துன்புறுத்துவதாகக் கண்ணனுக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனக் காப்பாளர் கண்ணன், யானையை துன்புறுத்திய கிருஷ்ணனை தட்டி கேட்டுள்ளார்.
அப்போது, இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. உடனே கிருஷ்ணன், வனக்காப்பாளர் கண்ணனை அருகில் இருந்த குளத்தில் தள்ளி மூழ்கடித்து கொலை செய்தார். இது குறித்து தகவலறிந்த மசினக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணனை கைது செய்தனர்.

இந்த கொலை வழக்கு உதகை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, கொலையாளி கிருஷ்ணனுக்கு 8 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்த நீதிபதி முரளிதரன் தீர்ப்பளித்தார்.