கோவை : கோவையில் 2 வயது பெண் குழந்தைக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில், மருத்துவத் துறையே பொறுப்பேற்க வேண்டுமென எச்.ஐ.வி. உள்ளோர் நலச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோவையில் இரண்டு வயது குழந்தைக்கு ஹெச்ஐவி இரத்தம் செலுத்தப்பட்டதாக எழுந்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கோவை மாவட்ட எச்.ஐ.வி. உள்ளோர் நலச்சங்கத்தின் தலைவர் மீனாட்சி, மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் இது குறித்து அவர் கூறியதாவது :- பெற்றோர்களால் குழந்தைக்கு எச்.ஐ.வி. வரவில்லை. பாலியல் தொல்லையும் ஏற்படவில்லை. இரத்தம் அல்லது ஊசி மூலமாக பரவியிருக்க வாய்ப்புகள் உள்ளன. அதேபோல, மருத்துவம் சார்ந்த துறை மூலமாகவே எச்.ஐ.வி. இக்குழந்தைக்கு வந்திருக்க வாய்ப்புள்ளது. இதற்கு மருத்துவத் துறையே பொறுப்பேற்க வேண்டும். மேலும், அக்குழந்தைக்கு மருத்துவம் மற்றும் பொருளாதார உதவிகளை அரசு செய்ய வேண்டும். எப்படி எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டது என்பது குறித்து முறையான விசாரணை நடத்தி, நல்ல தீர்வை தர வேண்டும், என தெரிவித்தார்.