கோவை : பிளக்ஸ் மற்றும் டிஜிட்டல் பேனர்களில் பிளக்ஸ் அமைப்பதற்கான அனுமதி எண் பதிந்தே பிரிண்ட் செய்ய வேண்டும் என பிளக்ஸ் பிரண்டர் உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில், பிளக்ஸ் மற்றும் டிஜிட்டல் பேனர்கள் வைப்பதற்கு சென்னை உயர்நீதிமன்ற அறிவுரைகளின்படி, தமிழ்நாடு அரசு வகுத்துள்ள ஒழுங்குமுறை விதிகளை கடைப்பிடிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், பிளக்ஸ் பிரிண்டர் உரிமையாளர்கள், அனைத்துக் அரசியல் கட்சிப் பிரமுகர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் ஓழுங்கு) பாலாஜிசரவணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பத்மாவதி, மாநகராட்சி, 12 ஊராட்சி ஒன்றியங்கள், 37 பேரூராட்சிகள், நகராட்சிகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தெரிவித்ததாவது :- சென்னை உயர்நீதிமன்றம் ஊரகம் மற்றும் நகரப் பகுதிகளுக்கு பொதுமக்கள் இடையூறு ஏற்படாத வகையில், தற்காலிக பிளக்ஸ் மற்றும் டிஜிட்டல் பேனர்கள் வைப்பதற்கு பல்வேறு ஒழுங்குமுறை விதிகளை தெரிவித்துள்ளது. நமது மாவட்டத்தில் அரசியல் கட்சிகள், தனியார் வணிக நிறுவனங்கள் என பலருக்கும் பிளக்ஸ் பேனர்கள் வைத்திட பல்வேறு அறிவுரைகள், தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது. இனிவரும் நாட்களில் முறையான அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள் வைப்பவர்களின் மீது நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்காலிகமாக பிளக்ஸ் மற்றும் டிஜிட்டல் பேனர்கள் அமைக்க அனுமதி கோரும் விண்ணப்பதாரர் வரைமுறைகளுக்குட்பட்டு முறையான ஆவணங்களுடன் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் விண்ணப்பித்து காவல்துறையினரின் தடையின்மைச் சான்றுடன், உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து முன் அனுமதி பெற்ற பின்னரே பிளக்ஸ் பேனர்கள் வைத்திடல் வேண்டும். 10 அடிக்கு குறைவாக நடைபாதையுள்ள சாலைகளின் இரு புறங்களிலும் பிளக்ஸ் மற்றும் டிஜிட்டல் பேனர்கள் அமைக்க அனுமதி கிடையாது. 40 அடிக்கு மேல் அகலமுள்ள சாலைகளில் இருபுறங்களிலும் பிளக்ஸ் மற்றும் டிஜிட்டல் பேனர்கள் அமைக்க விதிமுறைகளின்படி அனுமதி வழங்கப்படும்.
பிளக்ஸ் மற்றும் டிஜிட்டல் பேனர்கள் அமைக்க வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறுபவர்கள் மீதும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் அலுவலர்களைத் தடுப்பவர்கள் மீதும் ஓராண்டிற்கான சிறை தண்டனை அல்லது ரூ. 5,000 அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட பேனர்களை அகற்றுவதற்கான செலவினத் தொகையினை பிளக்ஸ் பேனர்கள் அமைத்தவரிடமிருந்தே வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
பிளக்ஸ் மற்றும் டிஜிட்டல் பேனர்கள் வைக்க அனுமதி பெற்ற விண்ணப்பதாரர், விதிமுறைகளை மீறி பிளகஸ் மற்றும் டிஜிட்டல் பேனர்கள் அமைத்துள்ளார் எனத் தெரியவரும் நிலையில், வழங்கப்பட்ட அனுமதி உடனடியாக இரத்து செய்யப்படுவதுடன், அவற்றை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற நேர்வுகளில் விண்ணப்பதாரர் செலுத்திய வைப்புத் தொகை திரும்ப வழங்கப்படமாட்டாது.
பிளக்ஸ் பிரண்டர் உரிமையாளர்கள், தாங்கள் பிரிண்ட் செய்யும் பிளக்ஸ் மற்றும் டிஜிட்டல் பேனர்களில் பிளக்ஸ் அமைப்பதற்கான அனுமதி எண் பதிந்தே பிரிண்ட் செய்ய வேண்டும். எனவே, பொதுமக்கள் நலன் சார்ந்து சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரையின்படி, தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள ஒழுங்குமுறை விதிகளை நமது மாவட்டத்தினைச் சேர்ந்த அரசியல் கட்சிப் பிரமுகர்கள், பிளக்ஸ் பிரிண்டர்ஸ் உரிமையாளர்கள் உள்ளிட்ட பிளக்ஸ் மற்றும் டிஜிட்டல் பேனர்கள் வைப்பவர்கள் கடைபிடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது, இவ்வாறு தெரிவித்தார்.