கோவை : செயலி மூலமாக பெரியவர்களிடம் கல்வியை கற்பித்ததற்காக அமிர்தா பல்கலைக்கழகத்திற்கு 1.25 லட்சம் டாலர் பரிசுத் தொகையை அமெரிக்கா பவுண்டேஷன் வழங்கியது.

பார்பரா புஷ் பவுண்டேஷன் சார்பில் ஆண்டுதோறும் எக்ஸ் பிரைஸ் என்ற பெரியவர்களுக்கு கல்வி புகட்டும் சிறந்த செயலியை தேர்ந்தெடுக்கும் போட்டி அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் அமிர்தா வித்யா பீடம் பல்கலைக்கழகம் பங்கேற்றது. இந்தப் போட்டியில் சிறந்த செயலியாக அமிர்தா பல்கலைக்கழகம் உருவாக்கிய செயலி தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் செயலி ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டவர்களிடமும், ஆங்கிலத்தை இரண்டாவது தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் வழங்கப்பட்டு, 12 மாதங்களில் அவர்களின் மொழித் திறன் எப்படி வளர்ந்துள்ளது என சோதனை செய்யப்பட்டது. இந்தச் சோதனையில் இறுதியாக 4 செயலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள மக்கள் அதிகமாகப் பதிவிறக்கம் செய்த அமிர்தா பல்கலைக்கழக செயலிக்கு முதல் பரிசாக 1.25 லட்சம் டாலர் கிடைத்தது. இந்தச் செயலி அமெரிக்காவில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களிடமும் மொழியை அறிவை மேம்படுத்தியுள்ளது.
அமிர்தா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப மையம் சார்பில் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான வடிவமைப்பை மாணவர்கள் உள்பட 18 பேர் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக இந்த ஆய்வுக்கு தலைமை வகித்த முனைவர் பிரேமா நெடுங்காடி கூறியதாவது :- ஸ்ரீ மாதா அம்ரிதானந்தமயி தேவியின் வழிகாட்டிதலின்பேரில்தான் இந்தச் செயலி உருவாக்கப்பட்டது. அனைத்துத் தரப்பு மக்களும் கல்வி பெற வேண்டும் என்பதே மாதாவின் ஒரே குறிக்கோள். எனவே, அனைவரின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தச் செயலி பரிசை வென்றுள்ளது, என்றார்.
இந்தச் செயலி சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டு, கதைகளாகவும், விளையாட்டாகவும் மக்களுக்கு ஆங்கிலம் போதித்து வருகிறது. Amrita Learning App கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுவொரு இலவச செயலி என்பது குறிப்பிடத்தக்கது.