எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் 2 வயது குழந்தைக்கு முறையான சிகிச்சை அளிக்க பெற்றோர் கோரிக்கை

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் 2 வயது குழந்தைக்கு முறையான சிகிச்சை அளிக்கக் கோரி குழந்தையின் தந்தை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.


கோவை : கோவை அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் 2 வயது குழந்தைக்கு முறையான சிகிச்சை அளிக்கக் கோரி குழந்தையின் தந்தை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகாவை சேர்ந்த தம்பதிகள் விஸ்வநாதன் (28) சித்ரா (25). இவர்களுக்கு கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ம் தேதி திருச்சி மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. மேலும், அந்த மருத்துவமனையில் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து, குழந்தையை சுமார் 32 நாட்கள் மருத்துவமனையிலே வைத்து சிகிச்சை அளித்துள்ளனர். 

கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 11ம் தேதியன்று அவர்களின் பெண் குழந்தை மஞ்சுவிற்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திடீரென உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மேல்சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், குழந்தைக்கு ரத்தம் செலுத்தப்பட்ட குடுவை குப்பைத்தொட்டியில் வீசப்பட்டிருந்தது. இது தொடர்பாக, மருத்துவர்களிடம் விளக்கம் கேட்ட போது, அவர்களின் பதில் குழந்தையின் பெற்றோர்களுக்கு சந்தேகத்தை உருவாக்கியது. 



மேலும், எச்.ஐ.வி. தொற்று ரத்தம் செலுத்தப்பட்டதாகப் பெற்றோர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து, நடத்தப்பட்ட பரிசோதனையில் குழந்தைக்கு எச்.ஐ.வி. இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தையின் தந்தை மனு அளித்தார். 



அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது குழந்தைக்கு சரியான சிகிச்சை அளிப்பதில்லை. மிரட்டும் பாணியில் மருத்துவமனை ஊழியர்கள் பேசுகின்றனர். மேலும், ஊடகங்களில் பேசக்கூடாது என மிரட்டுகின்றனர். ஆகவே, தன்னுடைய குழந்தைக்கு முறையான சிகிச்சை வழங்க வேண்டும். தன் குழந்தையைக் காப்பாற்றி தர வேண்டும், இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...