கோவை : கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து குன்னூர் வரை இயக்கப்பட்டு வரும் கூடுதல் சிறப்பு மலைரயில் சேவை ஊட்டி வரை நீட்டிக்கப்படவுள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.

நூற்றாண்டு பழமை வாய்ந்த மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நடைமேடை விரிவாக்க பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதனை ஆய்வு செய்யவும் மலைரயில் இயக்கம் மற்றும் இதன் பணிமனையிணை பார்வையிடவும் இன்று மாலை சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் சுப்பாராவ் இன்று வருகை தந்தார்.
மேட்டுப்பாளையம் ரயில்நிலையம் வந்த கோட்ட மேலாளர் ரயில் நிலையத்தை ஆய்வு செய்து பயணிகளின் வசதிக்காக செய்யபட்டிருந்த பணிகளை பார்வையிட்டார். பின்னர் மலைரயில் பணிமனையினைக்கு சென்றதோடு ரயில்நிலைய அதிகாரிகளோடு இனி வரும் காலங்களில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு தேவைப்படும் வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேலம் கோட்ட மேலாளர் சுப்பாராவ், “சுற்றுலா தளமான நீலகிரிக்கு செல்லும் நுழைவு வாயிலாக உள்ள மேட்டுப்பாளையம் ரயில்நிலையம் முக்கியத்துவம் வாய்ந்தது. உள்நாடு மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வரும் இந்த ரயில் நிலையத்தை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைக்களை எடுத்து வருகிறது.
இந்த ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன குளியல் கழிவறைகள் மற்றும் டீலக்ஸ் அறைகள் அமைக்கப்படவுள்ளது. தற்போது தினசரி மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு ஊட்டிக்கு மலைரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் வாரம்தோறும் சனிக்கிழமை நாட்களில் கூடுதலாக மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை சிறப்பு மலைரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இதனை ஊட்டி வரை இயக்கவேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கையினை ஏற்று விரைவில் சிறப்பு மலைரயில் சேவை ஊட்டி வரை நீட்டிக்கப்படும். மேலும் மலைரயிலில் செல்லும் பயணிகளுக்கு உணவு வழங்கும் கேட்டரிங் வசதி செய்ய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.