கோவை : கோவையில், தனியார் பார்சல் சர்வீஸ் ஊழியரிடம் இருந்து 5.798 கி.கிராம் தங்கம் கொள்ளையடித்து சென்ற சம்பவத்தில், 5 பேரை கைது செய்ததாக கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் ஐபிஎஸ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
கோவை : கோவையில், தனியார் பார்சல் சர்வீஸ் ஊழியரிடம் இருந்து 5.798 கி.கிராம் தங்கம் கொள்ளையடித்து சென்ற சம்பவத்தில், 5 பேரை கைது செய்ததாக கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் ஐபிஎஸ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
கடந்த 7ம் தேதி நவல்குமார் என்பவருக்கு சொந்தமான ஏர்பார்சல் சர்வீஸில், மும்பைக்கு விமானம் மூலம் தங்கத்தை அனுப்ப இருசக்கர வாகனத்தில் பிரதீவ் சிங் என்பவர் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில், எதிர்பாராத விதமாக பீளமேட்டில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் கல்லூரி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் பிரதீவ் சிங் வந்த வாகனத்தை வழி மறித்துள்ளது. மேலும், அவர் மீது தாக்குதல் நடத்தி அவரிடம் இருந்த 5.798 கி.கிராம் எடையுள்ள தங்ககட்டியை பறித்து சென்றனர்.
இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பிரதீப் சிங் ஆகியோர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த பீளமேடு குற்றவியல் போலீசார் பிரதீவ் சிங்கிடம் விசாரணை மேற்கொண்டனர். அதேபோல, கோவை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் மற்றும் துணை ஆணையர் பெருமாள் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது, அவர்கள் கூறியதாவது ;- இந்த கொள்ளை வழக்கில் பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தை மீட்கும் பணியில் தீவிரமாக உள்ளோம். கொள்ளை சம்பவம் நடந்தது அதிகாலை என்பதாலும், சிசிடிவி காட்சிகள் பெரிதும் உதவவில்லை. பார்சல் சர்வீஸ் அலுவலகத்தின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை, 15 நாட்கள் வரைக்கும் பின்னோக்கி ஆய்வு செய்து குற்றவாளிகளை நெருங்கி உள்ளோம்.
அதேபோல, 10 கி.மீ தொலைவில் உள்ள 50 மேற்பட்ட சிசிடிவி காட்சிகள், தொலைபேசி கால்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டன. இதில், கொள்ளை கும்பலில் முக்கியமாக செயல்பட்ட பார்சல் சர்வீஸ் அலுவலகத்தில் வேலைப்பார்த்த பெண் ஊழியர், பெண்ணின் கணவர் என 5 பேரை கைது செய்துள்ளோம். மேலும், கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளோம், எனத் தெரிவித்தார்.