நீலகிரி: சாதி, மதம் பேதமின்றி 172 ஜோடிகளுக்கு கூடலூர் பாடந்தொரை பகுதியில் எஸ்.ஒய்.எஸ். அமைப்பு சார்பில் இலவச சமத்துவ திருமணம் நடைபெற்றது.

கூடலூர் பாடந்தொரை பகுதியில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என 172 ஜோடிகளுக்கு இலவச சமத்துவ திருமணம் சுன்னத் ஜமாத் இளைஞர் அமைப்பு சார்பில் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளர்களாக நீலகிரி அ.தி.மு.க., மாவட்ட செயலாளரும், எம்.பி.யுமான கே.ஆர். அர்ஜூணன், முன்னாள் சுற்றுலாத் துறை அமைச்சர் மில்லர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சாதிமத பேதமின்றி நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சி அனைவரிடத்திலும் வரவேற்பைப் பெற்றது.

இந்த அமைப்பின் மூலம் திருமண ஜோடிகளுக்கு 5 சவரன் தங்க நகை, ரூ. 25,000 ரொக்கம் திருமணத்திற்கு தேவையான துணிகள் ஆகியவை வழங்கப்பட்டன. இந்த சமத்துவ திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 50,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டன.