கோவை : நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவுபெறுவதையடுத்து, பொள்ளாச்சியில் உள்ள கட்சி அலுவலகத்தில், கட்சி நிர்வாகிகள் சார்பில் முதலாம் ஆண்டு விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

கட்சியின் மேற்கு மண்டல தலைமை அலுவலகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில், ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து வரும் சிறுமி பூமிகா என்ற சிறுமி மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியை ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசனின் ஆதரவாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது.

பின்னர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டில் இருக்கும் தாய்மார்களுக்கு உணவுகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சிகளில், 100-க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.