தொகுதி பங்கீடு : மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியுடன் திமுக முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இன்று தி.மு.க. முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இன்று தி.மு.க. முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. 

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தி.மு.க., அமைத்துள்ள கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தி.மு.க.,வுடன் காங்கிரஸ் கட்சி நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, 10 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

அடுத்த கட்டமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இன்று தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தியது. இதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு இன்று காலை 10.30 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன், மத்திய குழு உறுப்பினர் சம்பத் ஆகியோர் வந்தனர்.

இவர்களை தி.மு.க. தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர். அறிவாலயத்தில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்றுள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, கே.என்.நேரு ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையின்போது, திருப்பூர், கன்னியாகுமரி தொகுதிகளில் போட்டியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விரும்புவதாக தெரிவித்தனர். இந்த தொகுதியை ஒதுக்க முடியாவிட்டால் மதுரை, கோவை தொகுதிகளை ஒதுக்குமாறு கோரிக்கை வைத்தனர். இந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்ததும் வெளியே வந்த மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இன்று நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்ததாகவும், மற்ற கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசிவிட்டு, தங்களுக்கு உரிய தொகுதிகளை தி.மு.க. தலைமை அறிவிக்கும் என்றும் கூறினார்.

இன்று பிற்பகல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிவாலயம் சென்று கூட்டணி பேச்சு நடத்துகிறார். அதேபோல, மாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் அறிவாலயம் சென்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அறிவாலய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...