நீலகிரி : மேட்டுப்பாளையம் மொத்த ஏல மையத்திற்கு நீலகிரி உருளைக்கிழங்கின் வரத்து முற்றிலும் குறைந்த போதும், வெளிமாநில உருளைக்கிழங்கு வரத்தால் உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயிர்செய்யப்படும் மலைக்காய்கறிகள் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவை கோவைமாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு கொண்டுவரபட்டு தரம் பிரிக்கப்படும். அதன் பின்னர், தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யபடும்.

குறிப்பாக, நீலகிரி உருளைக்கிழங்கு எப்போதும் தனி மார்கெட்டை பிடிக்கும். ஆகவே, சந்தைகளில் அதற்கென தனி இடம் இருக்கும். மேட்டுப்பாளையம் மொத்த மார்கெட்டிற்கு தினசரி 70 முதல் 80 லோடு உருளைக்கிழங்கு ஏல மையத்திற்கு கொண்டுவரப்படும். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அதன் நிலையற்ற விலை காரணமாக, உற்பத்தி குறைந்து வரத்து வெகுவாக குறைந்தது.
இந்நிலையில், இன்று நான்கு லோடு உருளைக்கிழங்கு மட்டுமே மேட்டுப்பாளையம் வந்தது. இதன் காரணமாக, நீலகிரி விவசாயிகளுக்கு என தனியாக இங்கு அமைக்கபட்டுள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில், உருளைக்கிழங்கினை தரம் பிரிக்க அமைக்கபட்டுள்ள கொட்டைகைகள் 80 சதவீதம் காலியகாவே இருந்தன. மேலும், வரத்து குறைவாக இருந்தாலும் 50 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ரூ.700 முதல் ரூ.1000 வரை மட்டுமே ஏலம் போனதால் கூடுதல் கிடைக்கும் என காத்திருந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

நீலகிரி உருளைக்கிழங்கின் வரத்து குறைந்த போதும் அண்டை மாநிலமான கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இருந்து அதிக அளவில் உருளைக்கிழங்கு மேட்டுப்பாளையத்திற்கு இறக்குமதி செய்யப்படுவதால் நீலகிரி உருளைக்கிழங்கு வரத்து குறைந்தும் போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.