நீலகிரி : பழங்கால நாணயங்கள், மன்னர்க்கால செம்பு நாணயங்கள், மற்றும் நீலகிரி மாவட்ட பழங்குடியின மக்களின் புகைப்படங்கள் ஆகியவை உதகை அரசு கலைக் கல்லூரியில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.

இக்கண்காட்சியில், இந்தியாவின் 1980ம் ஆண்டு மற்றும் 1986ம் ஆண்டுகளில் பயன்படுத்திய 10 பைசா மற்றும் 20 பைசா போன்ற நாணயங்கள், ரூ.1, ரூ.2 நோட்டுகள் மற்றும் அஞ்சல் தலைகள் ஆகியவை பார்வைக்காக வைக்கப்பட்டன.

மேலும், நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடி மக்களான தோடர், இருளர், குரும்பர், கோத்தர் காட்டுநாயக்கர் போன்றோர்களின் பழமை வாய்ந்த புகைப்படங்களும் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்த பழங்கால நாணயங்கள் மற்றும் புகைப்படக் கண்காட்சியினை கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.