கோவை : சட்டத்தால் மட்டுமே, மேற்கு தொடர்சி மலையினை காக்க முடியும், ஆகவே, தனி சட்டம் இயற்றுவது அவசியம் என வலிறுத்துகின்றனர், சூழலியல் ஆர்வலர்கள்.

மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு இயக்க தேசிய ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ், சிம்ப்ளிசிட்டியிடம் கூறியதாவது ;- மேற்கு தொடர்ச்சி மலையை காக்க, தனி சட்டம் இயற்றுவது குறித்து வலியுறுத்த வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலை பிரச்சினைகள், மற்ற மாநிலங்களைப் போன்றதல்ல.
மிக சிறந்த நீர் ஆதாரமான மேற்கு தொடர்ச்சி மலையை, மத்திய மாநில அரசுகள் நினைத்தால் சுலபமாக பாதுகாக்க முடியும். இது சிறந்த உயிர்சூழல் மையம். குறிப்பாக,மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சோலைக்காடுகளின் புல்வெளிதான், தண்ணீர்த் தொட்டி போன்று செயல்படுகின்றன.

இதனுள், தேங்கி இருக்கும் நீர் பாறையிடுக்குகள் வழியாக, பாய்ந்து நன்னீர் ஆதாரத்தினை உருவாக்குகின்றன. ஆகவே, வெறுமனே மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு என்றில்லாமல், அதனுடன் தொடர்புடைய நதிகளையும் பாதுகாக்கும் முயற்சிகளை முன் எடுக்க வேண்டும். அங்குள்ள, வேறெங்கும் காணமுடியாத மரங்கள், செடிகள் ஆகியவற்றையும் பாதுகாக்க வேண்டும். இதனை, சட்டத்தால் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும்.
இதற்காவே, கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற சூழலியல் திருவிழாவில், அனைத்து அமைப்புகளும் இணைந்து, மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு குறித்த கோரிக்கையை வரும் தேர்தலில் வலியுறுத்த வேண்டும் என முடிவு செய்துள்ளோம்.
மேலும், மலை, அதனை சுற்றியுள்ள இயற்கை அமைப்பு ஆகியவற்றின் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான விவகாரங்களுக்காகவே, ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறையும் கூட்டம் ஏற்பாடு செய்யப்படும். அதில், இதற்கான தீர்வுகளை பற்றி கலந்தாலோசிக்க முடிவு செய்துள்ளோம், இவ்வாறு அவர் பேசினார்.