கோவை : பி.எஸ்.ஜி. கல்லூரியில் பணியாளர்கள் தினம் இன்று கொண்டாடப்பட்ட நிலையில், 25 ஆண்டுகள் நிறைவு செய்த மூத்த ஊழியர்களுக்கு பரிசுகளும், பாராட்டுகளும் வழங்கப்பட்டன.

ஆண்டுதோறும் பி.எஸ்.ஜி.,யில் பணிபுரியும் பணியாளர்களை ஊக்குவிப்பதற்காக ஜி.ஆர்.டி. தாமோதரன் அவர்களின் நினைவாக பணியாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் கோவை பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி. மருத்துவமனை வளாகத்தில் பணியாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
இதில், 25 ஆண்டுகள் பணிபுரிந்த சிறந்த பணியாளர்களுக்கும், அவரது குழந்தைகள் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கும் என இரண்டு நபர்களுக்கும் பி.எஸ்.ஜி. குழுமம் சார்பாக முனைவர் தசரத்ராம் பாராட்டுகளையும், பதக்கங்களையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், சிறப்பு நாடகங்கள், இசை, நடன நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. இதில், நிர்வாக அறங்காவலர் கோபலகிருஷ்ணன், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமனோர் கலந்துகொண்டனர்.