வரும் மக்களவை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
வரும் மக்களவை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேசிய மற்றும் மாநில கட்சிகள் கூட்டணி அமைக்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஆளும் கட்சியான அ.தி.மு.க, நேற்று பா.ம.க மற்றும் பா.ஜ.க.,வுடனான கூட்டணியை உறுதி செய்ததுடன், தொகுதி பங்கீட்டையும் உறுதி செய்தது. மேலும், தே.மு.தி.க.வுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
மறுபுறம், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டிருந்தாலும், தொகுதி பங்கீடு இன்னமும் உறுதி செய்யப்படாமலேயே இருந்து வந்தது. இதனிடையே, டெல்லியில் ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் தலைவர்கள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்பிறகு, ராகுல் காந்தியுடன், கனிமொழியும் பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு பிறகு, இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், வேணுகோபால் சென்னை வந்தடைந்தனர். அவர்களை, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கே.எஸ்.அழகிரி மற்றும் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர், தொகுதி பங்கீடு குறித்து தி.மு.க.,வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னதாக, முகுல்வாஸ்னிக், சென்னை கிண்டியிலுள்ள தனியார் ஓட்டலில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தை சுமார் 2 மணிநேரத்திற்கு மேல் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, அண்ணா அறிவாலயம் சென்று மு.க.ஸ்டாலினுடன் முகுல்வாஸ்னிக் தலைமையிலான காங்கிரஸ் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 10 இடங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தாகியது. மேலும், 25 இடங்களில் தி.மு.க. போட்டியிடுகிறது.
இதைத்தொடர்ந்து, அண்ணா அறிவாலயம் சென்று மு.க.ஸ்டாலினுடன் முகுல்வாஸ்னிக் தலைமையிலான காங்கிரஸ் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு, தமிழகத்தில் 9 தொகுதியும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் என மொத்தம் 10 இடங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தாகியது.
பின்னர், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்கின் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பிற கட்சிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு, மற்ற கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என முடிவு செய்யப்படும் என்றும், கூட்டணி கட்சிகளுக்கு அளிக்கப்பட்டது போக எஞ்சிய தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடும் என ஸ்டாலின் கூறினார்.