மின்னணுப் பணப் பரிவர்த்தனையை வாடிக்கையாளர் பாதுகாப்பாக கையாள முக்கிய ஆலோசனைகள்

கோவை : மின்னணுப் பரிவர்த்தனையை எளிமையாகவும், பாதுகாப்பாகவும் வாடிக்கையாளர்கள் கையாள்வதற்கு தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

கோவை : மின்னணுப் பரிவர்த்தனையை எளிமையாகவும், பாதுகாப்பாகவும் வாடிக்கையாளர்கள் கையாள்வதற்கு தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளது. 

மின்னணுப் பரிவர்த்தனையை எளிமையாகவும், பாதுகாப்பாகவும், தடையற்ற வகையிலும், நுகர்வோர் மேற்கொள்ள தேசிய மின்னணுப் பணப்பரிவர்த்தனைக் கழகம் (என்.பி.சி.ஐ.) பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

மின்னணுப் பணப்பரிவர்த்தனை நடைமுறைகளை நுகர்வோர் தற்போது பரவலாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்தப் புதிய சூழலில் பாதுகாப்பு குறித்து கற்றுக் கொள்வதும் தலையாய ஒன்றாக உள்ளது. 

நுகர்வோர் பாதுகாப்புக்கான பல்வேறு வழிமுறைகளை பல்வேறு பாதுகாப்புக் கட்டுப்பாடுகளுடன் செயலிகளுக்குள் தேசிய பணப் பரிவர்த்தனைக் கழகம் அறிமுகம் செய்துள்ளது.

ரிமோட் ஸ்க்ரீன் அக்செஸ்-சின் செயல் முறை : 

• மோசடியில் ஈடுபடுவோர், பாதிக்கப்படுபவர்களைத் தொடர்பு கொண்டு ரிமோட் ஸ்க்ரீன் அக்செஸ் செயலியை பிளேஸ்டோர் அல்லது ஆப்ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யுமாறு கூறுவார்கள். 

• அந்த செயலியின் சங்கேத குறியீடு (ஆப்கோட்) 9 இலக்க எண்ணாக இருக்கும். அதை நுகர்வோர், வாடிக்கையாளர்களின் சாதனத்தில் இருந்து தமக்குத் தெரியப்படுத்துமாறு மோசடியாளர்கள் கூறுவார்கள். 

• இந்த 9 இலக்க எண்ணைக் கொண்டு மோசடியாளர் அவரது சாதனத்தில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துவிட்டால் அதன் பின் மற்ற செயலிகளைப்போல சில விளக்கங்களைக் கேட்கும். நுகர்வோரின் செயலியில் அது போன்ற சில அனுமதிகளைக் கொடுக்குமாறு மோசடியாளர்கள் கூறுவார்கள். 

• அதன் பின் நுகர்வோரின் சாதனத்திற்கு மோசடியாளர்கள் தொலைவில் இருந்தே எளிதில் சென்று செயல்பட முடியும். 

• அதைத் தொடர்ந்து செயலியின் செயல்பாடுகள் மோசடியாளர்களுக்கு சாதகமாக அமைந்து அதன் மூலம் அதன் மூலம் வாடிக்கையாளரின் மொபைல் செயலியில் ஏற்கெனவே உள்ள செயலிக்குள் அவர்கள் நுழைந்து பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். 

பேமெண்ட் (பணம் செலுத்துதல்), பேங்கிங் (வங்கி), வாலெட்டுகள், சமூகவலை தளங்கள் என எல்லா வகையான செயலிகளுக்கும் இந்த ரிமோட் ஆக்செஸ் செயலியின் செயல்பாடுகள் தொடர்பான அச்சுறுத்தல் உண்டு. 

ஒரு முறை வாடிக்கையாளர், நுகர்வோரால் மோசடியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டால் மோசடியாளர்கள் பணப்பரிவர்த்தனைகளைச் செய்வதுடன் ஆன்லைன் ஷாப்பிங், ரயில், விமான பதிவுகளை மேற்கொள்ளுதல், போன்ற வற்றையும் செய்வார்கள். இதுவரை இது போன்ற புகார்கள் மிகக்குறைவாகவே வந்துள்ளன. 

அதாவது இதுவரை மொத்தம் இது தொடர்பாக 5 புகார்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன. ஆனாலும் வாடிக்கையாளர்களை மிகவும் விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு தேசிய பணப் பரிவர்த்தனைக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

என்.பி.சி.ஐ.,யின் சிக்கல்கள் மேலாண்மை பிரிவுத் தலைவர் பாரத் பஞ்சால் கூறுகையில், " வங்கிகள், நிதித் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்ற பலவும் வாடிக்கையாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த இணைந்து செயல்பட வேண்டும். 

கணக்கு மற்றும் அட்டைகள் தொடர்பான விவரங்கள், பின் எண்கள் போன்றவற்றை மற்றவர்களிடம் கொடுக்காமல் இருப்பதற்காகவும், மொபைல் போன்களில் இது போன்ற ரிமோட் ஸ்க்ரீன் அக்செஸ் செயலிகள் மூலம் தெரியாத மற்றவர்கள் நுழைவதை அனுமதிக்காமல் இருக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். 

யு.பி.ஐ. எனப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட பணப் பரிவர்த்தனை இடைமுக அங்கங்களின் மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான பாதுகாப்பை என்.பி.சி.ஐ. தொடர்ந்து உறுதி செய்யும். மோசடிகள் தொடர்பாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தேவைப்படும் போது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்." என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...