சமத்துப் பையனான சின்னத்தம்பி பெரிய கூண்டிற்கு மாற்றம்

கோவை : உடுமலைப் பகுதியில் இருந்து மீண்டும் பிடித்துச் செல்லப்பட்ட சின்னத்தம்பியை பெரிய அளவிலான கூண்டிற்கு வனத்துறையினர் மாற்றம் செய்துள்ளனர்.

கோவை : உடுமலைப் பகுதியில் இருந்து மீண்டும் பிடித்துச் செல்லப்பட்ட சின்னத்தம்பியை பெரிய அளவிலான கூண்டிற்கு வனத்துறையினர் மாற்றம் செய்துள்ளனர். 

கடந்த சில தினங்களாகவே மடத்துக்குளம், கண்ணாடிப்புத்தூர் பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் தஞ்சமடைந்த சின்னதம்பியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர், சின்னதம்பியை லாரியில் ஏற்றி ஆனைமலை புலிகள் காப்பக வரகளியாறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. 

பின்னர், கலீம் மற்றும் 2 பெண் யானைகள் உதவியுடன் கூண்டுக்குள் அடைக்க 30 நிமிடம் போராட்டம் நடந்தது. கூண்டுக்குள் நுழைந்ததுமே, சின்னதம்பி அமைதியாக மாறிவிட்டான். 

இந்தக் கூண்டானது, சின்னத்தம்பியின் உடலுக்கு சரியான அளவில் இருந்ததால், சுதந்திரமாக நிற்கவோ, நடக்கவோ முடியாத நிலையில் இருந்தது. இருப்பினும், கால்நடை மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் சின்னதம்பி வைக்கப்பட்டான். 

வலிநிவாரணி, ஊட்டச்சத்து ஊசிகளை செலுத்தினர். சின்னதம்பி இருக்கும் பகுதிக்கு வேறு காட்டு யானைகள் வந்துவிடக்கூடாது என்பதற்காக 5 யானைகள் கூடவே பாதுகாப்புக்கு நின்று கொண்டிருக்கின்றன.

அதேபோல, சின்னதம்பிக்கு உணவளிக்கவும், கவனித்து கொள்ளவும் பாகன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வேளை சோளம், பசுந்தீவனம், கரும்பு, தென்னை ஓலைகள் உள்ளிட்ட சாப்பாடு கொடுக்கப்படுகிறது.

பொதுவாக, சிறைபிடிக்கப்படும் காட்டு யானைகள் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டு, ஒரு மாத பயிற்சிக்கு பின்னரோ அல்லது அதன் மனநிலையை பொறுத்தோ, அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

ஆனால், சின்னத்தம்பி விஷயத்தில் இந்த நடவடிக்கை சற்று மாறுபட்டதாகவே காணப்பட்டுள்ளது. அதாவது, வெறும் ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சின்னத்தம்பியை, சாதாரணமாக வெளியே விட்டுள்ளனர். பின்னர், அவன் சுதந்திரமாக நடமாடும் வகையில் பெரிய அளவிலான கூண்டில் மீண்டும் அடைத்தனர்.

"சின்னத்தம்பி அமைதியான மனநிலையுடன், மிகவும் ஆரோக்யமாக இருக்கிறான். அவனை இங்குள்ள சூழலுக்கு ஏற்ற வகையில் மாற்றுவற்காக, 5 யானைகள் எப்போதும் அருகிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சின்னத்தம்பியின் உடல்நிலையை மருத்துவர்கள் குழு 24 மணிநேரமும் கண்காணித்து வருகிறது," என்கின்றனர் அதிகாரிகள்

2 மாத பயிற்சிக்குள் பாகனை தனது மீது ஏற்றி அமர சின்னத்தம்பி ஒத்துழைக்கும்பட்சத்தில், அதற்கான பயிற்சி நிறைவு பெறும் என வன அதிகாரிகள் கூறுகின்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...