சென்னை : தமிழகத்தில் விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

விளையாட்டுத் துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அரசு வேலை வாய்ப்புகளில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தார். இதற்காக 24 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்த நிலையில், விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
விளையாட்டில் சாதனை புரியும் வீரர்களை அரசு தேர்வு செய்து கல்லூரிகளிடம் பட்டியலை வழங்கும். அந்த பட்டியலின் அடிப்படையில் சிறந்த விளையாட்டு வீரர்களை கல்லூரி நிர்வாகம் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தங்கும் வசதி, உணவு, கல்லூரிக் கட்டணம் ஆகியவற்றை இலவசமாக அளிக்கும். மேலும், மாணவர்களுக்கு சிறந்த பயிற்சியையும் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.