தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் இன்றி தத்தளிக்கும் தி.மு.க., : கோவையில் அமைச்சர் உதயகுமார் கிண்டல்

கோவை : நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்குக் கூட வேட்பாளர்கள் இல்லாமல் தி.மு.க.,தத்தளித்து கொண்டிருப்பதாக கோவையில் அமைச்சர் உதயகுமார் கிண்டலடித்துள்ளார்.


கோவை : நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்குக் கூட வேட்பாளர்கள் இல்லாமல் தி.மு.க.,தத்தளித்து கொண்டிருப்பதாக கோவையில் அமைச்சர் உதயகுமார் கிண்டலடித்துள்ளார். 

கோவை மண்டல அம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் அரங்கில் இன்று நடைபெற்றது. இதில், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், நாடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரன், ஏ.கே. செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜூனன், பி.ஆர்.ஜி. அருண்குமார், கனகராஜ், முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ஜெயலலிதா பிறந்த நாளன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி அமைந்தது அம்மாவே முன்நின்று நடத்தியது போல் உணர்கிறேன்.

இதனால், நாங்கள் மகிழ்ச்சியில் உள்ளோம். மேலும், அ.தி.மு.க., கூட்டணி அறிவிப்பிற்கு பிறகு, அ.மு.மு.க., துணை பொதுச்செயலாளர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல், சட்டமன்ற தேர்தல்தான் தங்களது இலக்கு என்பார். ஏனெனில், அவரது கட்சியில் உள்ளவர்கள் தேர்தலில் நிற்க முன்வரவில்லை. 

இதேபோல, தி.மு.க.,வில் தேர்தலில் நிற்க யாரும் முன்வராத காரணத்தால் வேட்பாளர்களை தேடி தி.மு.க., தத்தளித்து கொண்டு, கூட்டணியை ஒருங்கிணைத்து அறிவிக்க முடியாத சூழலில் உள்ளது, என்றார்.

மேலும், பா.ம.க., அ.தி.மு.க., கூட்டணி குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- கொள்கை அளவில் தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதியை கொலை செய்ய வைகோ முயற்சித்ததாக,க் கூறி தி.மு.க.,வில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்டார். 

இதனைக் கண்டித்து 9 பேர் தீவைத்து தற்கொலை செய்து கொண்டனர். இதற்காகவே தி.மு.க.,விற்கு எதிராக ம.தி.மு.க.,வை தொடங்கி, மக்கள் நலனை விட்டுக் கொடுப்பதற்காக தி.மு.க.,வுடன் வைகோ கூட்டணி அமைத்து உள்ளார். மக்களுக்கு எது நல்லதோ, அதற்கேற்ற ஒருமித்த கருத்து உள்ள கட்சிகளுடன் அ.தி.மு.க., கூட்டணி அமைந்துள்ளது. இதனை தமிழக மக்கள் வரவேற்கின்றனர். இந்தக் கூட்டணி வெற்றி கூட்டணி, எனக் கூறினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...