கோவை: கோவை மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் என மொத்தம் 1 லட்சத்து 81 ஆயிரம் குடும்பங்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு சிறப்பு நிதியாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன் பின் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்ட தொடரிலும் இது குறித்த அரசாணையும் வெளியிடபட்டது.
இதனை அடுத்து கோவை மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை கணக்கெடுக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பாக கோவை ஊரக பகுதிகளிலும் நகர்புற பகுதிகளில் மாநகராட்சி சார்பாகவும் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
ஊரக பகுதிகளில் 74 ஆயிரம் குடும்பங்கள் எனவும் நகர்புற பகுதிகளில், 1 லட்சத்து 7 ஆயிரம் குடும்பங்கள் எனவும் மொத்தம் 1 லட்சத்து 81 ஆயிரம் குடும்பங்கள் இதுவரை வறுமைக் கோட்டி ற்கு கீழ் உள்ள குடும்பங்கள் கணக்கிடப்பட்டுள்ளன.
இது குறித்து தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ கோவை ஊரக பகுதிகள் ஏற்கனவே 2013, 2014, 2015-ம் ஆண்டு வரை தமிழக ஊரக மேம்பாட்டு திட்டம் மூலமாக, கிராம சபை ஒப்புதலோடு மக்களின் வாயிலாகவே பிப் (pip - poor Identity people ) சர்வே எடுக்கப்பட்டு அரசாங்கத்தின் இ- மதி இணையதளத்தில் ஏற்றப்பட்டுள்ளது.
அதே போல் மாநகர் பகுதிகளில் மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகள் சார்பாக பி.பி.எல் (BPL- Below Poverty Line) சர்வே எடுக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது இதில் விடுப்பட்டவர்களை சேர்க்கம் பணிகள் போய்கொண்டிருக்கிறது. விடுபட்டவர்கள் தங்கள் அருகில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்கத்தில் விண்ணப்பத்தை பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம்,’’ என்றார்.
கோவை மாநகராட்சி சார்பாக 100 வார்டுகளில் 2 வார்டுக்கு ஒரு நபர் என 50 பணியாளர்கள் இந்த கணக்கெடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி மாதம் இறுதிக்குள் கணக்கெடுப்பு பணிகள் நிறைவடையும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.