கோட நாடு விவகாரம் : குற்றவாளி மனோஜ் சாமி உதகை நீதிமன்றத்தில் ஆஜர்

நீலகிரி : கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய மனோஜ் சாமி இன்று காலை உதகை நீதிமன்றத்தில் ஆஜரானார்.

நீலகிரி : கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய மனோஜ் சாமி இன்று காலை உதகை நீதிமன்றத்தில் ஆஜரானார். 

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத மனோஜ் சாமிக்கு இம்மாதம் 18ம் தேதி பிடிவாரண்ட் பிறப்பித்திருந்த நிலையில், மாவட்ட நீதிபதி வடமலை முன்பு இன்று சரணடைந்தார். 



இதையடுத்து, நீதிபதி வடமலை விசாரணையை இன்று மதியத்திற்கு ஒத்தி வைத்தார். மேலும், மாலையில் வழக்கு விசாரணையை மேற்கொண்டு, மனோஜ் சாமியை வரும் மார்ச் 4ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, மனோஜ் சாமி கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். 

இதனிடையே, தலை மறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகளான சயான், வாளையார் மனோஜ் ஆகியோரை வரும் பிப்ரவரி 25ம் தேதி வரை கைது செய்யக் கூடாதென்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், கோத்தகிரி காவல் துறைக்கு இன்று உத்தரவிட்டார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...