நீலகிரி : ஜம்மூ - காஷ்மீர் மாநிலத்தில் தற்கொலைப்படை தாக்குதலில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு உதகை வழக்கறிஞர்கள் சார்பில் மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.

காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாத அமைப்பு நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 44 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகினர். நாட்டிற்காக உயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், உதகை வழக்கறிஞர்கள் சார்பில் உதகை ஏ.டி.சி. திடல் பகுதியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.
அப்போது, நாட்டிற்காக உயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் எனவும், நாட்டில் தீவிரவாதத்தை ஒழிக்கவும், வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவும் போன்ற வாசகங்களை கொண்ட பதாகைளை கையில் ஏந்தி சென்றனர். இந்த மவுன அஞ்சலி ஊர்வலத்தில் 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, நாட்டில் தீவிரவாதத்தை ஒழிக்க பாரத பிரதமருக்கு வழக்கறிஞர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.