கோவை : காஷ்மீர் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு, கோவையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக அஞ்சலி செலுத்திய பின், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது வெடி பொருள்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை மோத செய்து, பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைப் படை தாக்குதலில் 2 தமிழக வீரர்கள் உள்பட 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த கொடூர சம்பவத்தைக் கண்டித்து, உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பல்வேறு அமைப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கோவையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி மற்றும் கண்டன முழக்கம் கோவை தெற்கு தாலூகா அலுவலகம் முன்பாக நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கோவை மண்டலத்தலைவர் சூலூர் சந்திரசேகரன் தலைமை ஏற்றார். கோவை மாவட்ட வணிகர் சங்கத்தின் நிர்வாகிகள் இருதயராஜ், வஹாப், கணேசன் மற்றும் சௌந்தர் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், கோவையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வணிகர்கள் கையில் பதாகைகளுடன் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். பின்னர், ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமாக இருந்த பயங்கரவாத அமைப்புகளை கண்டித்து கண்டன கோசங்கள் எழுப்பினர்.