கோவை : பல்லுயிர் பெருக்கத்தின் முன்மாதிரியாகத் திகழும் கோவை சிங்காநல்லூர் குளத்தில் மீன் பிடி தொழில் தடைசெய்யப்பட்ட பின்னும் கூட ஒப்பந்ததார் மீன்பிடிப்பதைத் தொடர்வதால், அங்குள்ள பறவைகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு பாதிப்படைந்து வருகிறது.

தமிழகத்தின் முதல் நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக சிங்காநல்லூர் குளம் அறிவிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, குளத்தின் உயிர் பன்மை தன்மையைக் காக்க, கடந்த வருடம் டிசம்பர் மாதம் 30 -ம் தேதி நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி குளத்தில் வணிக நோக்கில் மீன் பிடிப்பதை தடை செய்து அறிவித்தார். அதன்படி, ஜனவரி 1 -ம் தேதி முதல் அந்த குளத்தில் மீன் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், எவ்வித நோட்டீஸ் மற்றும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருப்பதால், சிங்காநல்லூர் குளத்தில் தொடர்ச்சியாக அந்த ஒப்பந்ததாரார் மீன் பிடித் தொழிலை நடத்தி வருகிறார். அமைச்சர் அறிவித்தும், தடையை விதித்தும் அதனை பொறுட்டுப்படுத்தாமல் மீன் பிடித் தொழிலை நிகழ்த்தி வரும் ஒப்பந்தாரரைப் போலவே, அதிகாரிகளும் கண்களை மூடிக் கொண்டு அமைதி காக்கிறார்கள்.
இதனிடையே, சிங்காநல்லூர் குளத்தில் மீன் பிடிக்க போடப்பட்டுள்ள ஒப்பந்தம் கடந்த வருடம் 31 -ம் தேதி நிறைவடைந்துள்ளது. கோவை மாவட்ட நிர்வாகம் பல்லுயிர்தன்மையை பாதுகாக்க வேண்டி, அந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்காத நிலையில், தகவலை மீன்வளத்துறைக்கும் அனுப்பி உறுதி செய்துள்ளது.

ஆனால், ஒப்பந்ததாரர் தடைசெய்யப்படக் குளத்தில் மீன்பிடி தொழில் தொடர்ந்து நடத்தி வருகிறார். மேலும், குளத்திற்கு வெளியிலே அந்த மீன்களைப் பிடித்து வந்து விற்பனைக்கு பரப்பி வைக்கும் நிகழ்ச்சி இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதையடுத்து, இந்த விதிமீறல் தொடர்பாக, சமூக ஆர்வலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில், கோவை நன்னீர் மீன்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், மாநில அதிகாரிகள் உள்ளூர் மீன்களிலே வித்தியாசமான மீன்களை குளத்தில் விட்டு, கொஞ்சம் கொஞ்சமாக மீன்களின் பெருக்கத்தையும், பல்லுயிர்தன்மையையும் அதிகப்படுத்துவதாகத் திட்டமிட்டிருந்ததனர்.
ஆனால், மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள உள்ளூர் மீனவர்கள், விரைவில் இனப்பெருக்கம் செய்யும் மீன்களை குளத்தில் விட்டு தொழிலை மேற்கொள்கின்றனர். இந்த மீன்கள், ஏற்கனவே குளத்தில் வாழும் உள்ளூர் மீன்களை இரையாக எடுத்துக் கொள்கின்றன.
இந்த சுழற்சியான நிகழ்வில், குளத்தில் இருக்கும் மீன்களைக் காப்பாற்ற படிப்படியாகத் தான் முயற்சிகளை மேற்கொள்ள முடியும் என்ற நிலையில், இன்றளவும் குளத்தில் நடைபெறும் மீன் பிடி தொழில் அதற்கு பெரிய தடையாக உள்ளது.
"இந்த குளம் கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஒப்பந்தம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறையினால் வழங்கப்படுகிறது. இது போன்ற வித்தியாசமான முறைகள், அமைப்பு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அதனால் தான் இது போன்ற விதிமுறைகள் கவனிக்கப்படவில்லை," என்கிறார் ஆர்வலர் ஒருவர்.
இது தொடர்பாக மீன்வளத்துறையின் கூடுதல் இயக்குனர் கௌசல்யாவை தொடர்பு கொண்டு போது, அவர் கூறியதாவது ;- இந்த விதிமீறலை கண்காணிப்பது எங்கள் பொறுப்பல்ல, இந்த குளம் கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. நாங்கள் அந்த பகுதி மற்றும் குளத்தை பார்வையிட்டு, அதற்கு ஒப்பந்தாரர் செலுத்த வேண்டிய பணத்தை மட்டும் தான் முடிவு செய்வோம். மற்றபடி, அங்கு நடக்கும் விதி மீறல்கள் குறித்து நடவடிக்கை எடுப்பது எங்கள் வேலை அல்ல, என்றார்.
இது தொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொள்ளும் போது அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை.
இந்த விவகாரத்தை போலவே, வெள்ளலூர் நீர்நிலையில் மனித தன்மையற்ற முறையில், மீன் பிடி முறைகளை பின்பற்றுகின்றனர். இந்த குளத்தில், மீன்களை தின்று வாழும் பறவைகளை கொடூரமாக முறைகளில் விரட்டி விட்டு மீன் பிடித்தொழிலை மேற்கொள்கின்றனர்.
மீன்களை லாவகமாக பிடிக்கக் கையாளும் முறைகளான குச்சியை வைத்து தட்டுதல், பரிசலை டம் டம் என ஒலிக்கச் செய்தல் முதலிய தொந்தரவுகளால் பறவைகள் அங்கிருந்து விரப்படுகின்றன. இதனால் அவற்றின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும், வெள்ளலூர் நீர்நிலையில் அதிகளவில் காணப்படும் சாம்பல் கூழைக்கடா என்றழைக்கப்படும் ஸ்பாட் பில்டு பெலிக்கன் பறவைகளை கவன்களை கொண்டு தாக்கி விரட்டுகின்றனர்.

பறவைகளுக்கு பாதுகாப்பில்லாத இது போன்ற சூழல் நிலவும் கோவை குளங்கள் தான், அதிகளவில் பறவையினங்களையும் கொண்டுள்ளது. ஆகவே, பறவைகளைப் பாதுகாத்து, விதிமுறைகளுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு, ஆர்வர்லர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.