கோவை : விமான நிலையங்களை தனியார்மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய விமான நிலைய ஆணையத்தின் உறுப்பினர்கள் அறிவித்திருந்த கால வரையற்ற வேலை நிறுத்தம், மற்றும் உண்ணா விரதப் போராட்டத்தினை ஒத்தி வைத்துள்ளனர்.

இந்திய விமான நிலைய அதிகாரிகள் (AAI) , ஆறு விமான நிலையத்தை தனிமயாமாக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அறிவித்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தை, ஒத்தி வைத்துள்ளனர். இது தொடர்பாக, புது டெல்லியில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், வரும் 25ம் தேதி அன்று உண்ணாவிரத போராட்டத்தைத் தொடர்ந்து, பேரணியும் நடைபெறவுள்ளாதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
"காஷ்மீரில் தற்கொலைப் படையினரின் தாக்குதலில், 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இந்த சம்பவத்தால், நாட்டில் அமைதியற்ற நிலை உருவாகியுள்ளது. ஆகவே, இன்று அறிவித்திருந்த வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் வரும் பிப்.,25ம் தேதி மாற்றப்பட்டுள்ளது," என விமான நிலைய உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.