கோவை : வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் பா.ஜ.க., பா.ம.க. உருவாகியுள்ள நிலையில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது :- அ.தி.மு.க., - பா.ஜ.க கூட்டணி, தி.மு.க.,வுக்கு சாதகமாக அமையும். பா.ம.க.,வும் கைகோர்த்தது, தி.மு.க.,வுக்கு கூடுதல் சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அ.தி.மு.க. கூட்டணி ஜெயலலிதாவின் எண்ணத்திற்கு எதிரானது. பா.ம.க. எந்த கூட்டணியில் இணைந்தாலும், அக்கட்சிக்கு வெற்றி என்பது மாயை. அக்கட்சியின் உண்மை முகத்தை சட்டசபையில் ஜெயலலிதா தோலுரித்து காட்டினார். திராவிடக் கட்சிகளுடன் 110 சதவீதம் கூட்டணியில்லை என கூறியிருந்தார் ராமதாஸ், எனக் கூறினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் பேசுகையில், "அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்தாலும் வெற்றி பெறாது. காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவுபெற்றுள்ளது. கூட்டணி உடன்பாடு மற்றும் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்," என்றார்.