நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிடும் அ.தி.மு.க., பா.ம.க. கூட்டணி ஏற்கனவே மக்களால் தோற்கடிக்கப்பட்ட கூட்டணி என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், இன்று ஆளும். அ.தி.மு.க., தலைமையில் பா.ம.க., பா.ஜ.க., கூட்டணி அமைத்து போடுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக, இந்த 3 கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளும் சென்னையில் சந்தித்து கூட்டணி குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த நிலையில், இந்த கூட்டணி குறித்து நிகழ்ச்சி ஒன்றில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:- 2009 தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ம.க., படுதோல்வியை சந்தித்தது. வரும் தேர்தலில் இந்த நிலை தான் ஏற்படும். அ.தி.மு.க., பா.ம.க., கூட்டணி ஏற்கனவே மக்களால் தோற்கடிக்கப்பட்ட கூட்டணி.
அ.தி.மு.க., ஆட்சியை விமர்சித்து புத்தகம் வெளியிட்டவர் ராமதாஸ். அ.தி.மு.க., குறித்தும் பா.ம.க., எந்த அளவிற்கு விமர்சனம் செய்தது என்பது அனைவருக்கும் தெரியும். 7 மக்களவை தொகுதி மற்றும் ராஜ்யசபா சீட்டுக்கு பின்னால், ஏதோ ஒன்று உள்ளது. நாட்டை பற்றியும், மக்களை பற்றியும் ராமதாசுக்கு கவலை இல்லை, இவ்வாறு அவர் பேசினார்.