1,000 ஆண்டுகள் பழமையான காரமடை அரங்கநாதர் கோவில் மாசிமக தேரோட்டம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கோவை : காரமடை அருகே உள்ள பழமை வாய்ந்த அரங்கநாதர் கோவிலில் நடைபெற்ற மாசிமக தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக் கடனை செலுத்தினர்.

கோவை : காரமடை அருகே உள்ள பழமை வாய்ந்த அரங்கநாதர் கோவிலில் நடைபெற்ற மாசிமக தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக் கடனை செலுத்தினர்.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள காரமடை அரங்கநாதர் கோவில், வைணவ தலங்களில் பிரசித்தி பெற்றதாகும். சுமார் 1,200 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக தேர்த்திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். 

கிருஷ்ணதேவராயர் ஆட்சி காலத்தில் கொங்கு நாட்டை ஆண்டு வந்த திருமலை நாயக்கர் இக்கோவிலுக்கு புதிய தேரை வழங்கி மாசி மகம் பௌர்ணமி தினத்தன்று தேரோட்டத்தை நடத்தி பெருவிழாவாக கொண்டாடப்படுவதை துவக்கி வைத்துள்ளார். 

இதன்படி, இவ்வாண்டு மாசிமக விழா இம்மாதம் 13 தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் அரங்கநாதர் திருக்கல்யாணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தினசரி நடைபெற்று வந்த நிலையில் இன்று விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்ட நிகழ்ச்சி இன்று மாலை ஐந்து மணியளவில் நடைபெற்றது. 



கோவிலின் முன்புறம் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட தேரில் அரங்கநாதர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருள தேரரோட்டம் புறப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தபராக் என்ற கோஷத்துடன் வடம் பிடித்திழுக்க கோவிலின் நான்கு மாட வீதிகள் வழியாக திருத்தேர் பவனி நடைபெற்றது. பக்தர்கள் பலரும் தேரின் மீது வாழைப்பழங்களை வீசி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். 

இந்த நிகழ்ச்சியில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி என பல மாவட்டங்களில் இருந்தும் சுமார் 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். 

காரமடையில் இன்று மாலை நடைபெற்ற திருத்தேரோட்ட நிகழ்ச்சியினை முன்னிட்டு கோவை -மேட்டுப்பாளையம் இடையேயான சாலை மார்க்கத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, அரசு போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. 

இந்நிகழ்ச்சியினை முன்னிட்டு காரமடை பகுதியில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...