நீலகிரி : கூடலூர் ஜென்ம நிலம் தொடர்பான விவகாரத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, அங்குள்ள மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நிரூபர்களிடம் கூறியதாவது:- கூடலுாரில் செக்ஷன்-53 ஆக மாற்றப்பட்ட நிலங்களை வனநிலமாக மாற்றும் வகையில், மாநில சட்டசபையில் '16ஏ' என்ற பெயரில் புதிய வனச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. செக்ஷன்-53 வனநிலம் தொடர்பாக கொண்டு வரப்பட்டுள்ள '16ஏ' வனச் சட்டத்தால், எந்த பாதிப்பும் இல்லை. சிலர் திட்டமிட்டு தனிநபர் பிரச்சினையை பேசி குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
உச்சநீதிமன்ற உத்தரவுபடி, புதிய ஆக்கிரமிப்புகளை ஏற்க முடியாது. புதிய ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். தனிப்பட்ட நபர்களை விட இங்குள்ள மக்களின் பாதுகாப்பு முக்கியம். மக்களுக்காக உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி, தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இச்சட்டம் குறித்து மக்களிடம் தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது, இவ்வாறு தெரிவத்தார்.