நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பனியன் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பழங்குடியின பெண்கள் பயனடைகின்ற வகையில், விற்பனை மண்டலம் ஏற்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கப்படவுள்ளது என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் இன்று பழங்குடியினர் மற்றும் ஆதி திராவிடருக்கான சுய தொழில் முனைவோருக்கான சிறப்பு பயிற்சி முகாமில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் பேசினார்.
அவர் பேசியதாவது ;- ஈரோடு மாவட்டம் முதலிபாளையத்தில் கதர் கிராம தொழில் வாரியத்தின் கீழ் இயங்கும் தொழிற்பேட்டையை மேம்படுத்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறேன். இதே போல, ராமேஸ்வரம் பகுதி மீனவர்களுக்கு பயன் தரும் வகையில் மீன் விற்பனைக் கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நீலகிரி மாவட்டத்தில் பனியன் பின்னும் தொழிலில் ஈடுபட்டுள்ள பழங்குடியின பெண்கள் பயனடைகின்ற வகையில் விற்பனை மண்டலம் ஏற்படுத்த ரூ.3 கோடி ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது, இவ்வாறு அவர் பேசினார்.
கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்தின் உறுப்பினர் சந்திரமெளலி பேசுகையில், "இந்த வாரியம் மூலம் ரூ.52 ஆயிரம் கோடி மதிப்பிற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது," என்றார்.