கோவையில் தீக்குச்சிகளைப் பயன்படுத்தி புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி

கோவை : தேச பாதுகாப்பிற்கு உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு நாட்டு மக்கள் வீரவணக்கம் செலுத்துவது போன்று, தீக்குச்சிகளால் வடிவமைத்த யு.எம்.டி.ராஜாவின் படைப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


கோவை : தேச பாதுகாப்பிற்கு உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு நாட்டு மக்கள் வீரவணக்கம் செலுத்துவது போன்று, தீக்குச்சிகளால் வடிவமைத்த யு.எம்.டி.ராஜாவின் படைப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி. ராஜா. இவர், அவ்வப்போது பல்வேறு வகையான சிற்பங்களை உருவாக்கி வருகிறார். 

கடந்த காலங்களில் ஹெல்மெட் விழிப்புணர்வு, டெங்கு கொசு விழிப்புணர்வு பட்டாசு, ஹெல்மெட் விநாயகர், மெழுகுகள் கொண்டு தேச தலைவர்கள் உருவம், ஜல்லிகட்டை வரவேற்கும் விதமாக சிறிய தங்கத்தினால் ஆன சிறிய சிற்பம்,1 00 சதவீத வாக்குகள் குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட ஏராளமான சிற்பங்களை செய்து உள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாத தாக்குதலில் 44 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தது. மேலும், உயிரிழந்த வீரர்களுக்கு நாடு முழுவதும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக, கோவை தங்க நகை தொழிலாளி யு.எம்.டி ராஜா, 44 தீக்குச்சிகளின் மருந்து பகுதியில் இந்திய ராணுவ வீரர்களின் திருவுருவமும், அதனை சுற்றி இந்திய இளைஞர்கள் வெள்ளை தீக்குச்சிகளை பதித்து தேச ஒற்றுமைக்கு நாங்கள் உள்ளோம் என்பதை விளக்கும் விதமாக வடிவமைத்து உள்ளார். அவரது இந்த படைப்பு அனைவரிடத்திலும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...