கூடலூரில் பிரிவு 17 நிலப்பிரச்சினை விவகாரம் : 1,000-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டம்

நீலகிரி : புதிய வனச் சட்டம் 16-ஏ-வை ரத்து செய்யக்கோரி கூடலூரில் அனைத்து அரசியல் பொதுநல அமைப்பினர் சார்பில், 24 மணிநேர முழு அடைப்பு போராட்டம் இன்று தொடங்கியது.

நீலகிரி : புதிய வனச் சட்டம் 16-ஏ-வை ரத்து செய்யக்கோரி கூடலூரில் அனைத்து அரசியல் பொதுநல அமைப்பினர் சார்பில், 24 மணிநேர முழு அடைப்பு போராட்டம் இன்று தொடங்கியது.



கூடலூர் பந்தலூர் தாலுகா பகுதிகளுக்கு உட்பட்ட சுமார் 88,000 ஏக்கர் நிலம்பூர் ஜமீன் நிலம் கடந்த 1969-ஆம் ஆண்டு ஜமீன் ஒழிப்பு மற்றும் ரயத்துவாரி பட்டா வழங்கும் சட்டத்தின் கீழ் அரசுடமை ஆக்கப்பட்டது. இதில், ஒரு சில பகுதிகளுக்கு பட்டா வழங்கப்பட்டு, 52,000 ஏக்கர் நிலம் பிரிவு 17 என்ற சட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்படாமல், கடந்த 50 ஆண்டு காலமாக உள்ளது.

இந்த நிலங்களில் 17 ஆயிரம் ஏக்கர் நிலம் வனத்துறைக்கு ஒப்படைப்பதற்காக பிரிவு 58 என்ற சட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலங்கள் முறையாக அளவீடு செய்யப்படாமலும், அந்த நிலங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டிய நிலையில், தற்போது 16 ஏ என்ற வனச்சட்டத்தை தமிழக அரசு சட்டமன்றத்தில் இயற்றியதோடு, அதை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி உள்ளது.

இச்சட்டத்தின்படி, அரசுடமையாக்கப்பட்ட ஜென்ம நிலங்களில் எந்த நிலத்தையும், எந்தவித விசாரணையும் இன்றி உடனடியாக வனமாக மாற்றும் அதிகாரம் அரசுக்கு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ள நிலையில், அரசியல் பொதுநல அமைப்புகள் இது குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வந்தன. ஆனால், சுமார் 30 ஆயிரம் விவசாயிகள், மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டிய அரசும், மாவட்ட நிர்வாகமும், மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளை முறையாக மதிக்காமலும், வனமாக ஒதுக்கப்பட்ட பகுதிகளில், விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள் உள்ளதா என்பது குறித்து எந்த தகவலும் அளிக்காமல் அலட்சியப்படுத்துவதாக அனைத்து அரசியல் பொது நல அமைப்பினர் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், வனச்சட்டம் 16-ஏ-வை ரத்து செய்யக் கோரியும், நிலப்பட்டா, வீட்டுமனை பட்டா வீடுகளுக்கு மின் இணைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் அனைத்து அரசியல் பொது நல அமைப்பினர் சார்பில் கூடலூர், பாட்டவயல், தேவர் சோலை, பாடந்துரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. இதில், 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, இன்று அதே கோரிக்கைகளை முன் வைத்து, அனைத்து அரசியல் கட்சிகள், வியாபாரிகள் சங்கங்கள், சிறு,குறு விவசாயிகள் சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் ஒன்றிணைந்து கூடலூர் தொகுதி மக்கள் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் கூடலூர், பாட்ட வயல், தேவர் சோலை, பாடந்துரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதில், ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...