நீலகிரி : முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் அமைந்துள்ள நாகம்பள்ளி கிராமத்தை சேர்ந்த நபரை காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் பெரும்பாலான இடங்கள் வனத்தையொட்டிய விவசாய நிலங்கள் ஆகும். இங்குள்ள தோட்டங்களி்ல் வேலைக்கு செல்பவர்கள் இரவு நேரத்தில் வீடு திரும்புவர். இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பக பகுதியில், தோட்ட வேலைக்காக சென்ற நாகம்பள்ளி கிராமத்தை சேர்ந்த வாசு ( 47), மற்றும் கிருஷ்ணன் (45) என்பவர்களை நீண்ட நேரம் ஆகியும் காணவில்லை.

இதையடுத்து, இருவரையும் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் தேடி வந்தனர். இந்நிலையில், கிருஷ்ணன் இன்று காலை வீடு திரும்பினார். ஆனால், வாசு வரவில்லை. தோட்ட வேலையை முடித்து விட்டு வந்த வாசுவை, வனத்தில் இருந்து வெளிவந்த யானை தாக்கியதுள்ளது. இதில், படுகாயடைந்த வாசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து வனத்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய வனத்துறையினர் பிரேத பரிதனைக்காக கூடலூர் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.