கோவை : கோவை அரசு மருத்துவமனையில் 2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட இரத்தம் ஏற்றப்பட்டதாகப் புகார் எழுந்ததையடுத்து, மருத்துவமனையின் முதல்வர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

கோவை அரசு மருத்துவமனையில், இருதய நோய் பாதிக்கப்பட்ட 2 வயது குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக, குழந்தைக்கு சிகிச்சைக்காக ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. தற்போது, மீண்டும் குழந்தைக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அப்போது, குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அறிந்த பெற்றோர் அதிர்ச்சிக்கு ஆளாகினர்.
இதையடுத்து, குழந்தையின் பெற்றோர்கள் இருவருக்கும் எச்.ஐ.வி சோதனை செய்யப்பட்டது. இதில், அவர்களுக்கு பாதிப்பு இல்லாதது உறுதி செய்யப்பட்டது. மேலும், இது குறித்து பெற்றோர் தரப்பில் கூறும் போது, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் வேறு எங்கும் குழந்தையை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லவில்லை, என்கிறார்கள்.
இந்நிலையில், மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், கோவை அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்டதில் பிரச்சினை இருந்திருக்க வாய்ப்பு இல்லை, எனத் தெரிவித்துள்ளனர். மேலும், பெற்றொரின் புகாரைத் தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனை டீன் அசோகன் விசாரணை நடத்தி வருகிறார்.