நீலகிரி : புதிய வனச் சட்டம் 16-ஏ-வை ரத்து செய்யக்கோரி கூடலூரில் அனைத்து அரசியல் பொதுநல அமைப்பினர் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது.

கூடலூர் பந்தலூர் தாலுகா பகுதிகளுக்கு உட்பட்ட சுமார் 88,000 ஏக்கர் நிலம்பூர் ஜமீன் நிலம் கடந்த 1969-ஆம் ஆண்டு ஜமீன் ஒழிப்பு மற்றும் ரயத்துவாரி பட்டா வழங்கும் சட்டத்தின் கீழ் அரசுடமை ஆக்கப்பட்டது. இதில், ஒரு சில பகுதிகளுக்கு பட்டா வழங்கப்பட்டு, 52,000 ஏக்கர் நிலம் பிரிவு 17 என்ற சட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்படாமல், கடந்த 50 ஆண்டு காலமாக உள்ளது.
இந்த நிலங்களில் 17 ஆயிரம் ஏக்கர் நிலம் வனத்துறைக்கு ஒப்படைப்பதற்காக பிரிவு 58 என்ற சட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலங்கள் முறையாக அளவீடு செய்யப்படாமலும், அந்த நிலங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டிய நிலையில், தற்போது 16 ஏ என்ற வனச்சட்டத்தை தமிழக அரசு சட்டமன்றத்தில் இயற்றியதோடு, அதை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி உள்ளது.
இச்சட்டத்தின்படி, அரசுடமையாக்கப்பட்ட ஜென்ம நிலங்களில் எந்த நிலத்தையும், எந்தவித விசாரணையும் இன்றி உடனடியாக வனமாக மாற்றும் அதிகாரம் அரசுக்கு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ள நிலையில், அரசியல் பொதுநல அமைப்புகள் இது குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வந்தன. ஆனால், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டிய அரசும், மாவட்ட நிர்வாகமும், மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளை முறையாக மதிக்காமலும், வனமாக ஒதுக்கப்பட்ட பகுதிகளில், விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள் உள்ளதா என்பது குறித்து எந்த தகவலும் அளிக்காமல் அலட்சியப்படுத்துவதாக அனைத்து அரசியல் பொது நல அமைப்பினர் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்த நிலையில், வனச்சட்டம் 16-ஏ-வை ரத்து செய்யக் கோரியும், நிலப்பட்டா, வீட்டுமனை பட்டா வீடுகளுக்கு மின் இணைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் அனைத்து அரசியல் பொது நல அமைப்பினர் சார்பில் கூடலூர், பாட்டவயல், தேவர் சேலை, பாடந்துரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. இதில், 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதனிடையே, அனைத்து அரசியல் கட்சிகள், வியாபாரிகள் சங்கங்கள், சிறு,குறு விவசாயிகள் சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் ஒன்றிணைந்து கூடலூர் தொகுதி மக்கள் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் நாளை (19-ம் தேதி) காலை 6 மணி முதல் 20-ம் தேதி காலை 6 மணி வரை கூடலூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் 24 மணிநேர முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.